புலிகள் தொடர்பால் கைதுகள் சீமானைக் குறிவைக்கும் மலேசியா!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதாக கூறி 7 நபர்களை மலேசிய காவலதுறை கைது செய்யப்பட்டது தொடர்பில் நடைப்பெற்ற பாதுகாப்பு துறையினால் ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவர் விடுதலைபுலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என சரியான ஆதாரம் கிடைத்தால் அவர் மலேசியாவுக்குள் வர தடை விதிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த நடிகர் யார் என்று பெயர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்படாவிட்டாலும், அது நடிகர் சீமானாகத்தான் இருக்கக்கூடும் என மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக முன்னிறுத்தி அரசியலில் வலம்வரும் நிலையில்,மலேசியாவிலும் நாம் தமிழர் கட்சி கிளை இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய
தாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்