சென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி

சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ளது.

இந்த நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு, இந்திய அரசாங்கம் அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் வெளிநாட்டுக்கான (சிறிலங்கா) சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலி மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகளுக்கு அலையன்ஸ் எயர் நிறுவனம், ATR 72-600 விமானங்களைப் பயன்படுத்தவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்