பதவி விலகினார் சிவாஜி!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் நேரடியாக கையளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ அமைப்பின் தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் ஐனாதிபதி தேர்தலில் சுயேட்சயாக போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார்.

இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கட்சி நிர்வாகம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்தது.
இந்நிலையிலேயே தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள்
தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில்

About இலக்கியன்

மறுமொழி இடவும்