அடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு!

மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரு அரசாங்கம் தற்போது காணப்படுவதால் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

பழைய அரசாங்கமே இன்னும் காணப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். எனினும் இது வரையில் ஐந்திற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கவிருக்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். மக்களின் நிலைப்பாட்டை ஏற்று அதற்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்