கோத்தபாய போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார்!!

ஐனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தபாய ராஐபக்சவின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன போர் வெற்றிகளில் அல்லது போர்க்காலச் சிந்தனைகளிலேயே தற்போதும் இருக்கின்றார் போன்றதான நிலைப்பாட்டையே எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஐனநாயக அரசியலுக்கு வந்தள்ளதால் போர்காசல் சிந்தனைகளில் இருந்து கோத்தபாய மாற வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்க நினைத்தால் அது அவருக்கு பாரதூரமாக அமையுமென்று எச்சரிக்கை விடுத்துள்ள சிறிதரன் தமிழ் மக்கள் இனவாத ரீதியாக கோத்தபாய ராஐபக்சவை பார்க்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக கோத்தபாய முன்னெடுத்த செயற்பாடுகள் அவரை எதிர்மனப்பாங்கோடு பார்க்கின்ற நிலைமையை ஏற்படுத்தி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

இன்றைய கால கட்டத்திலே மிக முக்கியமாக அண்மையில் நடைபெற்று முடிந்த ஐனாதிபதி தேர்தலிற்குப் பிற்பாடு இலங்கையினுடைய அரசியலில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தங்களுக்கான தலைவரை தெரிவு செய்யகின்ற விடயத்தில் மிகத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றார்கள்.

அதே நேரத்தில தமிழ் மக்களும் தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலே ஒரு வெளிப்படையான தேர்தல் முடிவை சொல்லியிருக்கின்றார்கள்.குறிப்பாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைகள் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போர் வன்மங்கள் தொடர்பிலே இன்றும் தமிழர்கள் ஆழ்ந்த துக்கத்தோடும் அது பற்றி தெளிவாக சிந்திக்க வேண்டிய எண்ணங்களோடும் இருக்கிறார்கள்.

இந்த எண்ணங்களும் சிந்தனைகளும் கோத்தபாய ராஐபக்சவை ஒரு போரக்குற்றவாளியாக, போரை வழிநடாத்திய ஒரு மனிதனாக, இவ்வளவு பேரையும் கிட்டத்தட்ட 146 000 பேரையும் இறுதி யுத்தத்தில் காணாமலாக்கியும், கொல்வதற்கும் காரணமாக இருந்தவர் என்றதொரு எதிர்மனப்பாங்கோடும் எதிரியாகவும் பார்க்கின்ற மனநிலை தமிழ் மக்களிடமிரந்த இன்னும் மாறவில்லை.

ஆனாலும் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எவ்வளவு ரூபாக்களை அவர்கள் செலவழித்து அவர்களுடைய பல முன்னாள் அமைச்சர்களை, படைத்தளபதிகளை களமிறக்கி கூட வடக்கிலும் கிழக்கிலும் அவரால் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்படட்ட வாக்குகளைப் பெறுவது மிகக் கடினமானதாகவே அமைந்திருக்கிறது.

அதே நேரத்தில் 11 இலட்சம் வரையான வாக்குகளை தமிழ் மக்கள் சஐpத் பிரேமதாசாவிற்கு வழங்கியிருக்கின்றார்கள். முக்கியமாக அதற்கான காரணம் இங்கே இனவன்மை ரீதியான செயற்பாடுகள் எதவும் இருக்கவில்லை.

வெளிப்படையாக நாங்கள் இந்த நாட்டு ஐனாதிபதியை தெரீவு செய்வதில் அவர் எந்த சிங்களவர் என்பதற்கு அப்பால் அவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்வார், அவருடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்குச் சார்பானதாக அல்லது எவருடையது வாய்ப்புக்களைத் தரக் கூடியதாக இருக்கிறது என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஒரு தெளிந்த மனதோடு தங்களுடைய வாக்குகளைப் பதீவு செய்திருக்கின்றார்கள்.

ஆகவே அதற்குப் பிற்பாடு கூட நான் சிங்கள பௌத்த வாக்குளால் தான் தெரிவாகி வந்திருக்கிறேன் என்று திரும்ப திரும்ப அடித்துக் கூறுகின்ற கோத்தபாய ராஐபக்ச அவர்கள் இன்னும் தன்னுடைய போர்க்குண வெற்றிகளில் இருந்து அல்லது தன்னுடைய போர்க்கால சிந்தனைகளில் இருந்த மாறவில்லை என்பதைத் தான் அவருடைய இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மிக இறுக்கமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

இந்த மனநிலைகளை அவர் மாற்றத் தவறினால் இயற்கையும் வரலாறும் தான் விரும்பிய திசையிலே இன்னுமொரு பாதைக்கே கொண்டு செல்லும் ஏனென்றால் 2010 ஆம் ஆண்டு இருந்த நிலைமையில் தங்களை யாரும் அசைக்க முடியாத என்று இருந்த ராஐபக்ச குடும்பம் 2015 இல் ஆட்டம் கண்ட அந்த வரலாற்றை சரியாக படித்திருப்பார்கள்.

இப்பொழுதும் கூட அபிவிருத்தி மட்டும் தமிழர்களுக்கு வழங்கினால் அவர்கள் ஏதோ தங்களை நினைத்துக் கொண்டு போய்விடுவார்கள் அல்லது அவர்களுக்கு வேறு தேவைகள் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்தி அவர்களது அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கு கோத்தபாய ராஐபக்ச நினைத்தால் அது மிக பாரதூரமாக அமையும்.

குறிப்பாக அளவில் சிறிய தேசிய இனங்களான தமிழ்,முஸ்லீம,; மலைய தமிழ் தேசிய இனங்கள் தங்களுடைய இருப்புக்களைத் தக்க வைப்பதற்காகவும் தங்களுடைய இயலுமைகளைக் கொண்டு செல்வதற்காகவுமே இந்தத் தேர்தலில் மிக வெளிப்படையாக இன்னுமொரு சிங்களத் தலைவருக்கு தங்களுடைய வாக்குகளை பதீவு செய்திருந்தார்கள்.

ஆகவே தாங்கள் அளவிலே குறைந்த தேசிய இனமென்ற அடிப்படையில் தங்களுக்கே உரிய தனித்துவமான நில, மொழி, கலாசார, பண்பாட்ட அடையாளம் என வாழ்கின்ற தமிழ்த் தேசிய இனம் அழிந்து போகும் அல்லது பயந்து ஒடங்கிப் போகும் என்று புதிய ஐனாதிபதி கருதுவாரானால் அது அவருடைய அரசியல் பார்வையிலே இருக்கின்ற ஒரு பழுதான பக்கம் என்று தான் பார்க்க வேண்டும்.

குறிப்பாக ஒரு தெரவிலே நடந்த செல்கின்ற மனிதன் ஒரு எறும்மை விளக்கினால் அந்த எறும்பு கூட தனது எதிர்ப்பை தெரிவிக்க அவனது காலிலே கடிப்பது போல தமிழ்கள் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டார்கள் அல்லது அவர்கள் பயந்து போய் தான் இருப்பார்கள் என்று நினைத்தால் அது அவர்களுடைய பார்வையிலே இருக்கின்ற குறைபாடாகத் தான் அமையும்.

ஆகவே 80 வருடங்களுக்கு மேலாக தேசிய விடுதலைக்காக போராடி வருகிற தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய அபிலாசைகளைப் பூர்;த்தி செய்யப்பட வேண்டும். இந்த நிலைமையில் தற்போது; வந்திருக்கிற அரசியல் தலைவர்கள் குறிப்பாக புதிய ஐனாதிபதி கோட்டாபாய ராஐபக்ச அவர்கள் ஒரு தெளிந்த மனதோடும் தன்னுடைய யுத்த கால மனநிலைகளைத் தூக்கி வெளியில் கடாசிப் போட வேண்டும்.

ஒரு ஐனநாயக அரசியல் ஊடாக எவ்வாறு அவர் உள்ளுக்கு வந்தாரோ அந்த ஐனநாயக அரசியலை சரியாகப் பயன்படுத்தி பொறுப்புக் கூறல,; மனித உரிமைகளை மதித்தல,; நடைபெற்ற குற்றங்கள் மிண்டும் நிகழாமல் இருப்பதற்கான வழிமுறைகளைமுன்வைத்து அந்த அடிப்படையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை நிலைநாட்டுவதில் தன்னுடைய பங்ககளிப்பை அவர் செலுத்தினால் தெளிவான தலைவனாக தன்னை அடையாளப்படுத்த முடியும்.

அவ்வாறு இல்லை அவர் தன்னை சிங்கள பௌத்த மக்களுக்குரிய தலைவன் தான் நான் என்றும் அந்த பௌத்த சிங்கள சிந்தனையுடன் தான் இருப்பேன் என்றும் பௌத்த பிக்குமாரை மட்டும் வைத்த தான் என்னுடைய சத்திய பிரமாணத்தைக் கூட நான் செய்திரு;கிறேன் என்றும் கிறிஸ்தவ முஸ்லீம் இந்து மதங்களையும் புறக்கணித்து தான் நடப்பேன் என்றதான எண்ணம் அவரிடம் இருந்தால் அவர் அந்த எண்ணங்களோடு தான் மீண்டும் அரசியலில் செயற்படுவாராக இருந்தால் இயற்கை அவருக்கு சரியான பாடத்தையும் இயற்கை என்கின்ற இறைவன் அவருக்கு சரியான வழியையும் காட்டவதில் தவறிரு;காது.

ஏனெனில் எப்பொழுதும் வரலாறு இடைவெளியை வைப்பதில்லை. யாரும் தவறாக எடைபோடக் கூடாது. ஆகவே நாங்கள் அழிந்துவிட்டோம் அல்லது பேசக் கூட முடியாதவர்களாக மாறிவிட்டோம் என்பதல்ல. பூகோள அரசியல,; உலக நாடகளுடைய பார்வை. சர்வதேச ஒழங்குகள,; பிராந்திய நாடுகளுடைய அரசியல் பார்வைகள்ஈழத்திலே குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கிற தமிழ் மக்களுடைய மன எண்ணங்களை சரியாகப் புரிந்து கொண்டு அவர்களுடைய எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ற வகையில் முதலில் அரசியல் தீர்வை முன்வைத்து அந்த அரசியல் தீர்விற்கு ஊடாக தன்னை நிலைநாட்ட முனைந்தால் அது வெற்றியாக அமையுமென்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்