சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக வெளியான செய்திகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

தாம் யாருக்கும் எப்போதும் அவ்வாறான அறிக்கை வெளியிடவோ, கருத்துக்களைக் கூறவோ இல்லை, இது முற்றிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்விவகாரம் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் கூறியுள்ளார்.

“தேர்தலில் வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தெளிவான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு அமைச்சரவையும், சிறிலங்கா அதிபரும் பதிலளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தேசிய பிரச்சினைக்கான இறுதித் தீர்வை விரைவாகக் கண்டறிவதற்கு, புதிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்று நம்புகிறோம்.

சிறிலங்கா அதிபர் இப்போது பல அவசர விடயங்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர் இந்தியா செல்கிறார். நாங்கள் ஓரிரு நாட்கள் காத்திருந்து பார்ப்போம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தல் நடந்து ஒரு வாரம் மட்டுமே ஆகிறது. மக்களின் தீர்ப்பு சிறிலங்கா அதிபருக்கும் முழு உலகிற்கும் தெரியும், ”என்றும் அவர் கூறியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்