கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ வணக்கம்

தமிழீழ தேச விடுதலைக்காக களமாடி இன்னுயிர்களை ஈந்த மாவீர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தாயக நேரப்படி சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. பிரதான ஈகச்சுடரை இரு மாவீரர்களின் சகோதரியான நிரஞ்சன் கலைவாணி ஏற்றினார். அதைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் சுடர்களை ஏற்றினர்.

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக விடுதலைக் களமாடிய மாவீரக் குழந்தைகளை நினைந்து அவர்களின் பெற்றோர் உரித்துடையோர் கண்ணீர் சிந்தினர்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இவ்வருடம் மாவீரர் தினம் நடைபெறுமா என மக்கள் ஏங்கிக்கொண்டிருந்தனர்.

மாவீரர் தின நிகழ்வுகளைக் குழப்புவதற்கு படையினர் ஆங்காங்கே பெரும் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த தடைகளையும் உடைத்தெறிந்து மக்கள் திரண்டு வந்து மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

ஏந்தக் காலத்திலும் எமது விடுதலை வேட்கையை எவராலும் தடுக்க முடியாது என்பதை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைத் தீயை எவரர்லும் அணைக்க முடியாது என்பதற்கு பேரெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு சான்று பகர்ந்தது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை படையினர் ஆக்கிரமித்து படை முகாம் அமைத்துள்ள நிலையில், துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் மக்கள் மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்