தேசிய புலனாய்வு பணிப்பாளராக மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக (சிஎன்ஐ) நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கஜபா ரெஜிமென்ட்டின் முன்னாள் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் யாழ். பாதுகாப்புப் படைகளின் தளபதி உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த போது, உருவாக்கப்பட்ட அதிபர் காவல்படையின் தளபதியாகவும் பணியாற்றினார்.

இஸ்ரேலுக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்