தேர்தலில் ஈழ வரைபடம் வெளிப்பட்டது- கண்டுபிடித்த கெஹலிய

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது பிரதேசமான கண்டியில் நேற்று (32) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வரைபடமாகப் பார்த்தால் ஈழநாட்டு வரைப்படமானது அதில் தெளிவாகத் தெரிகிறது என்பது மூடிமறைக்க முடியாத உண்மையாகும் எனவும் அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்