நேற்று வரை இருந்து விட்டு மாற்று அணி தேடுகின்றனர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள். இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே தவிர அது மாற்று அணியாக இருக்காது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்.- என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்