முள்­ளி­வாய்க்­கா­லில் கரும்­பு­லிகளின் தொப்பி!

முள்­ளி­வாய்க்­கால் மேற்கு கடற்­க­ரைப் பகு­தி­யில் விடு­த­லைப் புலி­கள் அமைப்பின், கரும்­பு­லி­கள் அணி­யி­ன் சீரு­டைத் தொப்பி ஒன்று காணப்­பட்­ட­தா­கத் தெரிவிக்­கப்­ப­டு­கி­றது.

இறு­திப் போர் இடம்­பெற்ற முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கால் பகு­தி­யில், போரின் அடை­யா­ளங்­கள் இன்­னும் அழி­வ­டையாது முழித்­துக்­கொண்­டுள்­ளன.

அங்கு போரின்போது பயன்­ப­டுத்­தப்­பட்ட குண்­டு­கள், துப்­பாக்கி ரவை­கள், வெடித்­துச் சித­றிய சன்­னங்­கள், மக்­கள் விட்­டுச் சென்ற உடைமை­கள், ஒளிப்­ப­டங்­கள் போன்­றன அண்­மைக் காலங்­க­ளில் பல­ரா­லும் கண்­ட­றி­யப்­பட்­டன.

இந்த நிலை­யில் நேற்று அங்கு விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின், கரும்­பு­லி­கள் அணி­யி­ன­ரின் சீரு­டைத் தொப்பி ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், குறித்த பகு­தி­யின் பிரி­தொரு இடத்­தி­லி­ருந்து, இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரின் தொப்பி ஒன்­றும் காணப்­பட்­டது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தொடுக்கப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த
முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான

About இலக்கியன்

மறுமொழி இடவும்