பிரான்சு பந்தன் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2015 கல்லறை நிகழ்வுகள்!

பிரான்சில் மாவீரர் நாள் 2015 நிகழ்வுகள் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உப தலைவர் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை குறித்த மாவீரர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்தனர்.

கேணல் பரிதி அவர்களுக்கான பொதுச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் யூட் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்தது. அதனையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர்.dcp5464646464 (2) dcp5464646464 (3) dcp5464646464 (4) dcp5464646464 (5) dcp5464646464 (6) dcp5464646464 (7) dcp5464646464 (8) dcp5464646464 (9) dcp5464646464 (10) dcp5464646464 (11)

Top