தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2015 – சுவிஸ்

தமிழீழத் தேசிய விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக சுவிசில் நடைபெற்று முடிந்தது. இவர்டோன் நகரில் அமையப்பெற்ற நினைவுக்கல்லில் காலை 09:00 மணியளவில் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தலோடு ஆரம்ப வணக்க நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

தமிழீழ விடுதலைக்காய் தம்மை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அவர்களுக்குரிய மரியாதையோடு மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து தாயக விடுதலைக்காய் முதற்களப்பலியான லெப்ரினன்; சங்கர் அவர்களின் நடுகல்லிருந்து எடுத்துவரப்பட்ட புனிதமண் அவருடைய தந்தையார் திரு.செல்வச்சந்திரன் ஐயா அவர்களால் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் துணைப்பொறுப்பாளர் திரு. சஞ்சீவன்; அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினை ஏற்றியதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகளிலிருந்து சிறுதொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடுஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டதுடன் தாயக நேரம் 18:05 மணியளவில் மணியோசையுடன் பறை ஒலியினைத் தொடர்ந்து, சுவிஸ்; தமிழ்காவலர்ப் பொறுப்பாளர் திரு ரகு அவர்களால் முதன்மைச்சுடரேற்றப்பட்டு, அகவணக்கத்துடன் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்களிற்கு தீபமேற்றப்பட்டு நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து பாகங்களிலிருந்தும் 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மாவீரர்;களுக்கு வணக்கம் செலுத்திஇ திருவுருவப் படங்களுக்கு முன்னால் உறுதிமொழியை எடுத்தமையானது தாயக விடுதலையில் அவர்களின் பற்றினையும்இ உணர்வுடன் கூடிய விடுதலை வேணவாவினையும் புடம்போட்டு காட்டி நிற்கின்றது.
மாவீரர் சிறப்புக் கவிதையினை தொடர்ந்து சமகால நிகழ்வுகளைக் கருப்பொருளாகக் கொண்ட “உயிரில் விதி எழுதி“ எனும் நாடகமானது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்ததுடன்இ மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் உணர்வுமிக்க எழுச்சியோடு சிறப்பாக நடைபெற்றன.

நிகழ்வில் மாவீரர் நினைவு சுமந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு ‘தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்“ இனால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சு மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டதோடு சட்ட ஆலோசகரான திரு. லதன் அவர்களுடைய பேச்சும் தாய்த்தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளார் மரியாதைக்குரிய பேராசிரியார் திரு. அறிவரசன் ஐயா அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற பாடலை அனைவரும் இணைந்து பாடி தங்களுக்குள் உரமேற்றியதோடு, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்“ என்ற தாரக மந்திரத்தை உரத்து உச்சரித்ததோடு நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.dcp68676767676 (1) dcp68676767676 (2) dcp68676767676 (3) dcp68676767676 (4) dcp68676767676 (5) dcp68676767676 (6) dcp68676767676 (7) dcp68676767676 (8) dcp68676767676 (9) dcp68676767676 (10) dcp68676767676 (11) dcp68676767676 (12) dcp68676767676 (13) dcp68676767676 (14) dcp68676767676 (15) dcp68676767676 (16) dcp68676767676 (17) dcp68676767676 (18) dcp68676767676 (19) dcp68676767676 (20) dcp68676767676 (21) dcp68676767676 (22) dcp68676767676 (23) dcp68676767676 (24) dcp68676767676 (25) dcp68676767676 (26) dcp68676767676 (27) dcp68676767676 (28) dcp68676767676 (29) dcp68676767676 (30) dcp68676767676 (31) dcp68676767676 (32) dcp68676767676 (33) dcp68676767676 (34) dcp68676767676 (35)

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

Top