மகிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முற்றாக நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவை அடுத்து, மகிந்த ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்ட இராணுவ கொமாண்டோக்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு, 104 இராணுவக் கொமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில், முதற்கட்டமாக கடந்த மே 2ஆம் நாள், 52 இராணுவத்தினர் திருப்பி அழைக்கப்பட்டனர்.

மீதமுள்ள 52 இராணுவ கொமாண்டோக்களும் இன்று விலக்கிக் கொள்ளப்படவுள்ளனர். இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.

Top