வவுனியா சுந்தரபுரத்தில் உணர்வுபூர்வமாக கார்த்திகை 27 நினைவேந்தல்

வவுனியா சுதந்திரபுரத்தில் கார்த்திகை 27 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு சாந்தநாயகி நற்பணி மன்றம் மற்றும் அநீதிக்கும், அடக்குமுறைக்குமான அமையத்தின் ஏற்பாட்டில் மிகவும் எழுச்சி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் விடுவிக்காக உயிர்நீத்த மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.dcp54976464646464-5

தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், நினைவேந்தல் நிகழ்வை இறை ஆசியுடன் ஆரம்பித்து, பின்னர் நினைவேந்தல் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.dcp54976464646464-6

இதேவேளை, இருபது மாவீரர் குடும்பங்களுக்கான உணவுப் பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் இந்த நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.dcp54976464646464-2 dcp54976464646464-3 dcp54976464646464-4  dcp54976464646464-7

Top