பிரான்சு முல்கவுஸ் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள்!

பிரான்சு முல்கவுஸ் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் கடந்த 27.11.2016 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மாலை 18.10 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் பொதுச் சுடரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, பாரிஸ் நகரிலிருந்து வருகை தந்த திரு.குலராஜ் அவர்கள் ஏற்றிவைத்தார்.dcp676646464346-3

தொடர்ந்து கேணல் சங்கர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு முன்பாக முல்கவுஸ் மாவட்ட செயற்பாட்டார் சஞ்சி அவர்களும் கேணல் பரிதி அவர்களின் திரு உருவப்படத்திற்கு சங்கத் தலைவர் தீபன் அவர்களும் ஈகைச்சுடர் ஏற்றிவைத்தனர். சம நேரத்தில் ஏனைய மாவீர்ர் குடும்ப உரித்துள்ள உறவுகள் அவர்களின் உறவுகளின் திருவுவப்படத்திற்கு சுடர் ஏற்றினர். துயிலும் இல்லப்பாடல் ஒலித்தபோது அனைவரின் கண்களும் கண்ணீரால் பனித்திருந்தன.
அதைத் தொடர்த்து மாவீரர்நாளில் கலந்துகொண்ட மக்களும் மாவீர்ர்களின் திரு உருவப்படத்திற்கு கார்த்திகைப் பூ வைத்துத் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து தேசியத் தலைவர் அவர்களின் 2008 ஆம் ஆண்டு உரையின் முக்கிய பகுதி ஒலிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏனைய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. எழுச்சி நடனங்கள், கவிதைகள் போன்றன சிறப்பாக இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து மாவீரர் குடும்ப உறவுகள், உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு.குலராஜ் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்.
இறுதி நிகழ்வாக நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய முல்கவுஸ் தமிழ்ச்சோலை மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலித்தபோது அனைவரும் கைகளைத் தட்டி நின்றனர். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.dcp676646464346-2 dcp676646464346-4 dcp676646464346-5 dcp676646464346-6 dcp676646464346-7 dcp676646464346-8 dcp676646464346-9 dcp676646464346-10 dcp676646464346-11 dcp676646464346-12 dcp676646464346-13 dcp676646464346-14 dcp676646464346-15 dcp676646464346-16

Top