சுண்டிக்குளம் போராட்டத்தை தலைமைதாங்கியவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்!

சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 196 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை தலைமைதாங்கியவர் சிறிலங்கா இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்.

மக்கள் போராட்டத்தை வழிநடத்திவரும் கட்டைக்காட்டைச் சேர்ந்த செல்வராசா-உதயசீலன் என்பவரின் வீட்டிற்கு இன்று மாலை சீருடையில் சென்ற இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் மிரட்டிச் சென்றுள்ளார்கள்.

போராட்டத்தை குழப்பும் வகையில் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதன் மூலம் நியாயமான மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அச்சுறுத்தி குழுப்பும் நல்லாட்சி அரசின் கைங்கர்யம் அம்பலாமிகியுள்ளது.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் மு.காங்கேயன்!

தொடர்புடைய  செய்தி:

சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

About இலக்கியன்

மறுமொழி இடவும்