தமிழர்களின் உரிமைகளை நசுக்கியது சிங்கள அரசு – ஜெனிவாவில் வைகோ

கடந்த காலங்­க­ளில் இருந்து இன்று வரை தமி­ழர்­க­ளின் வாழ்­வா­தார உரி­மை­கள், மனித உரி­மை­கள் அனைத்­தும் இன­வாத சிங்­கள அர­சால் நசுக்­கப்­பட்­டுள்­ளன. நசுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐ.நா. வின் அன்­றைய அறிக்­கை­களே அதற்­குச் சாட்சி. தமி­ழர்­க­ளுக்கு நிகழ்ந்த கொடு­மை­க­ளைப் பார்த்து எவ­ரும் கண்­ணீர் சிந்­து­வா்.

இவ்­வாறு இந்­தி­யா­வின் ம.தி.மு. கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் வைகோ தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபையில் நேற்றுச் சிறப்­புரை ஆற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது:

ஐ.நா. அறிக்­கை­யின் படி 2009 மார்ச் மாதம் காயப்­பட்ட தமி­ழர்­கள் இருந்த மருத்­து­வ­மனை மீது குண்டு வீசப்­பட்­டது.

அங்­கி­ருந்த தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். 2009 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி லண்­டன் தொலைக்­காட்சி வெளி­யிட்ட காணொலி வெளிப்­ப­டுத்­திய காட்சி, குரு­தியை உறை­யச் செய்­யும்.

தமிழ் இளை­ஞர்­கள் எட்­டுப் பேர்­க­ளின் கைக­ளைப் பின்­பு­ற­மா­கக் கட்டி, கண்­க­ளைக் கட்டி, இழுத்­துச் சென்று, நிலத்­தில் மண்­டி­யிட வைத்து, உச்­சந்­த­லை­யில் சுட்­டார்­கள். துப்­பாக்­கிக் குண்­டு­கள் பாய்ந்­தன. அவர்­க­ளது தலை­கள் சிதறி, குருதி நிலத்­தில் சிந்­தி­யது.

2010 டிசெம்­பர் 2 ஆம் திகதி அதே சனல் 4 தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­பிய சம்­ப­வம் மிக­வும் கொடூ­ர­மா­னது. சுட்­டுக்­கொல்லப்பட்ட தமிழ் இளை­ஞர்­க­ளின் நிர்­வாண உடல்­கள் சித­றிக் கிடந்­தன. விடு­த­லைப் புலி­களின் தொலைக்­காட்­சி­யின் செய்தி வாசிப்­பா­ள­ரான இள­நங்கை இசைப்­பி­ரியா 15 சிங்­க­ளச் சிப்­பாய்­க­ளால் கொடூ­ர­மாக வன்­பு­ணர்­வுக்கு உட்­டுத்­தப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டார். ஆடை­கள் எது­வும் இல்­லாத அந்த அப­லைப் பெண்­ணின் உடல் சேற்­றில் வீசப்­பட்­டது.

பாது­காப்பு வல­யத்­துக்­குக் கொண்டு வரப்­பட்ட இலட்­சக்­க­ணக்­கான தமி­ழர்­க­ளுள் பெண்­கள், குழந்­தை­கள், ஆண்­கள் குண்­டு­வீச்­சால் கொன்று குவிக்­கப்­பட்­ட­னர். கர்ப்­பி­ணித் தமிழ்ப் பெண்­க­ளின் வயி­று­க­ளை சய­னைட் கத்­தி­யால் குத்­திக் கிழித்து, ஐந்த மாத, ஆறு மாதக் கருக்­களை மண்­ணில் தூக்கி எறிந்­த­னர்.

இந்த மிரு­கத்­த­ன­மான படு­கொ­லை­கள் சுட்­டிக்­காட்­டும் உண்மை யாதெ­னில், தமி­ழர்­க­ளின் மனித உரி­மை­களை ஆயி­ரம் அடிக்­குக் கீழே சிங்­கள அரசு குழி­தோண்­டிப் புதைத்­து­விட்­டது.

மனித உரிமை உறுப்பு நாடு­களை இரு கரங்­க­ளைக் கூப்பி வேண்­டு­கி­றேன். இலங்கை அரசு இழைத்த மனித உரி­மை­களை சுதந்­தி­ர­மான அனைத்­து­லக நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்க வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றும்­ப­டி கேட்­டுக் கொள்­கின்­றேன் – என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்