ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு அமெரிக்கா ஆதரவு – துருக்கி அதிபர் எர்டோகன்.

அமெரிக்கா ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கி அதிபர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அந்நாட்டு அதிபரான ரிசிப் தயிப் எர்டோகன் கூட்டம் ஒன்றில் பேசும் போது அமெரிக்காவின் மீதான பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தெளிவுப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். மேலும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் சிரிய அதிபர் பஷிர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கி வருவதாகவும், இதை முறியடிக்க வேண்டும் என்றும் எர்டோகன் தெரிவித்தார்.

Related posts

Top