பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிம்பு வலியுறுத்தல்.

முன்னுரிமை அடிப்படையில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் தலையிட வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்க, ஜல்லிக்கட்டை ஒழித்துக் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்று நடிகர் சிம்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சிம்பு தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் இந்த வீர விளையாட்டு குறித்து, சில அமைப்புகளும், தனிநபர்களும் தவறான தகவல்களை கொடுத்து அதிகாரத்தில் இருப்பவர்களையும் நீதித்துறையையும் தவறாக வழிநடத்திவிட்டதாக சிம்பு கூறியுள்ளார். முன்னுரிமை அடிப்படையில் நீதித்துறையும் அரசு நிர்வாகமும் தலையிட வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்க, ஜல்லிக்கட்டை ஒழிக்கும் பிரச்சனை முன்னணியில் இருப்பது தமக்கு வியப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்துகிற விளையாட்டு மட்டுமல்ல, இந்திய மாட்டு இனங்களை பாதுகாப்பதும்கூட என்றும் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

குடிமக்கள் என்ற முறையில் நாட்டின் ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்படும் அதேநேரத்தில், கலாச்சாரத்தை அதற்கு விலையாகக் கொடுக்க முடியாது என்றும் சிம்பு கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மாநில மக்களின் உணர்வுக்கு எதிராக திணிக்கப்படும் சட்டம் கட்டுப்படத்தக்கது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Top