அமெரிக்கா விமானநிலையத்தில் தாக்குதல்-பலர் பலி

அமெரிக்காவின் புளோரிடா Fort Lauderdale விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டு பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரேமினல் இரண்டில் பயணப் பொதிகளை எடுக்கும் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக உள்ளுர் நேரம் பிற்பகல் ஒருமணிக்கு GMT 6மணிக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக புளொரிடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டில் நிலத்தில் காயப்பட்ட பலரை காணக்கூடியதாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Top