வடமாகாண முதல்வருக்கு கனடா விமான நிலையத்தில் வரவேற்பு

கனடா மார்க்கம் நகர சபையுடன் ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நேற்று வெள்ளிக்கிழமை கனடா சென்ற வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி , கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் விமான நிலையம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை வரவேற்றனர்.

முதலமைச்சர் இன்று முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருப்பதுடன் எதிர்வரும் 14 திகதி பொங்கல் தினம் அன்று இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார். அத்துடன் மார்க்கம் நகர சபையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான பொங்கல் நிகழ்விலும் அன்றையதினம் அவர் கலந்துகொள்வார்.

Related posts

Top