நாமலுக்கு அடி விழுந்ததால், மகிந்த எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதோடு குறித்த காணொளி சமூக வலைத்தளங்களின் ஊடாக வேகமாக பரவி வருகின்றது.

நேற்றைய தினம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரமாக மாறியது எதனால் என்ற காரணம் இது வரையிலும் அறியப்பட வில்லை. அந்தவகையில் இதுவும் ஓர் நல்லாட்சி கவிழ்ப்புக்கான செயல் என்றே கூறப்படுகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது நாமல் ராஜபக்ச பொலிஸாரின் உத்தரவை தாண்டி உள்நுழைய முற்பட்ட வேளையில் பொலிஸார் அனுமதிக்க வில்லை.

மேலும் நாமலை முன்னேறவிடாமல் பிடித்து விலக்கிய பொலிஸாரின் செயற்பாடு அங்கிருந்த நாமல் ஆதரவாளர்களை கடும் கோபத்தில் தள்ளியது.

இதனால் “நாமல் மீது எவராவது கை வைத்தால் அழித்து விடுவோம், மகிந்த ராஜபக்சவின் புண்ணியத்தினாலேயே நாடு தற்போது அமைதியாக இருக்கின்றது, நாமல் மீது கை வைக்க முயலவேண்டாம், நாமலை தாக்கி விட்டார்கள் விடக்கூடாது எனவும் கூச்சலிட்டு எச்சரிக்கை வெளிப்படுத்தியள்ளனர்.

இந்த சம்பத்தை இத்தோடு விடப்போவதில்லை எனவும் ஆக்ரோச எச்சரிக்கைகளை நாமல் ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர். மேலும் ஆர்பாட்டத்தில் போது நாமல் மீது நீர்த்தாரையும் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

“அம்பாந்தோட்டையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாத்தறையில் இருந்து வந்த ரவுடிக் கும்பலின் மூலமாகவே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது”

நல்லாட்சி பேருந்துகளில் ரவுடிகளை வர வழைத்து தாக்குதல் நடத்தி விட்டு அதனை ஊர் மக்கள் மீது சுமத்திவிட்டது, கொழும்பில் இருந்தும், மாத்தறையில் இருந்தும் 50 பேருந்துகளில் ஆட்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அவர்கள் மூலமாகவே இந்த தாக்குதல்களும், பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதமும் விளைவிக்கப்பட்டது, இதனை விசாரணை செய்யவேண்டும் எனவும் மகிந்த கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சம்பவங்கள் காரணமாக மகிந்த ராஜபக்ச உச்சகட்ட கோபத்தில் உள்ளதாகவும், நாமல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தெடர்பிலும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top