தொண்டர்க சந்திக்கும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு சோர்வடைந்து இருந்த தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.தொண்டர்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூர், பவானிசாகர், மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு உள்ளிட்ட 8 தொகுதியில் உள்ள தொண்டர்களை நேற்று கவுந்தப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்தித்தார்.

மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்க விரும்பியவர்களுக்கு தொகுதி வாரியாக கவுன்டர் அமைக்கப்பட்டு அவர்களிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் டோக்கன் வழங்கினர். டோக்கனுடன் இரண்டு இரண்டு பேராக விஜயகாந்தை சந்தித்தனர். ஒரு முறை போட்டோ எடுத்தவர்கள் மீண்டும் புகைப்படம் எடுக்க வராமல் இருப்பதற்காக அவர்களுடைய விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா கவுந்தப்பாடி வந்த போதும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தனி அறையில் பல மணி நேரம் காத்திருந்து பின் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜயகாந்துடன் புறப்பட்டு சென்றார்.

Related posts

Top