அமெரிக்க யுத்தக்கப்பல்களை பின்தொடர்ந்த ஈரான் நாட்டு போர்க்கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்காவின் நாசகாரி கப்பலை நோக்கி அதிவேகத்தில் பயணித்த ஈரானிய போர்கலங்கள் மீது எச்சரிக்கை வேட்டுகள் தீர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹோர்மஸ் நீரிணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹோர்மஸ் நீரிணைப்பகுதியில் அமெரிக்காவின் இரு யுத்தக்கப்பல்களிற்கு பாதுகாப்பாக பயணித்துக்கொண்டிருந்த யுஎஸ்எஸ் மகன் என்ற கப்பலை நோக்கி வந்த ஈரானிய போர்கலங்களை நிற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அவை நிற்காததை தொடர்ந்து எச்சரிக்கை வேட்டுகள் தீர்க்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரானிய கப்பல்கள் அதிவேகத்தில் அதிநவீன ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பலை நோக்கி வந்தன என பென்டகன் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க நாசகாரிக்கு அருகில் 800 மீற்றர் இடைவெளியில் அவைவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து மகானும் அமெரிக்க ஹெலிக்கொப்டர்களும் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்துள்ளன.அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்னும் ஓரு வார காலப்பகுதியில் பதவியேற்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.வளைகுடாவில் அமெரிக்க கடற்படையினரை தொந்தரவு செய்பவர்கள் தாக்கப்படுவர் என டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Top