ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பிற்கெதிராக சட்டமா அதிபரும் மேன்முறையீடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரவிராஜ் கொலை விசாரணையானது, பிரதிவாதிகளின் கோரிக்கைக்கு அமைய விசேட ஜூரிகள் சபையில் விசாரிக்கப்பட்டு இறுதியில், வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐவரையும் நிரபாராதிகள் எனக் கூறி கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரவிராஜின் கொலை வழக்கு விசாரணைக்கு நல்லாட்சியில் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோருக்கு இத் தீர்ப்பானது பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்ததோடு, உள்நாட்டு விசாரணையின் நம்பகத்தன்மை இதன்மூலம் இல்லாமல் போயுள்ளதென பாதிக்கப்பட்ட தரப்பினர் விமர்சித்திருந்தனர்.

இதேவேளை, ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பாக அவரது பாரியார் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top