ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தடுக்கமுடியாது-பன்னீர்செல்வம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் கட்டிக்காக்கப்படும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ள பன்னீர்செல்வம், அரசியல் ஆதாயத்திற்காக தமிழக நலனை விட்டுக் கொடுத்தது திமுகதான் என குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வளவு போராட்டங்களை நடத்தினாலும் திமுகவால் பாவங்களை தொலைக்க முடியாது என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார். தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கவில்லை எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

Related posts

Top