வவுனியாவில் பட்டப் பகலில் இளைஞன் கொலை.

வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சற்றுமுன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் மாயானத்திற்கு செல்லும் வீதியில் வாடகைக்கு குடியிருந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் (வயது-25) என்ற குடும்பஸ்தர் எனத் தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் பெற்றோர் சுவிஸில் வசித்து வருவதாகவும், திருமணமாகி மனைவி நயினாதீவில் வசித்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறே குறித்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Top