ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் ‘தமிழ் பாரம்பரியத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்’, என முதல்வர் பன்னீர்செல்வம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த தமிழக முதல்வரின் கடித்தத்திற்கு மத்திய அரசு வழங்க இருக்கும் முடிவு பொங்கல் பண்டிகைக்கு முன் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts

Top