Soft இளையோர் அமைப்பினரின் செயற்பாட்டில் பலர் இணைவு

Soft இளையோர் அமைப்பினரின் இந்தவருடத்தின் முதற்செயற்பாடாக,கடந்த 07.01.2017 Dortmund நகரத்தின் விற்பனைநிலையங்கள், அங்காடிகள் போன்றவற்றின் நடாத்துநர்களுடனான சந்திப்பு அமைந்தது.

SOFT செயற்பாட்டின் ஊக்குவிப்பாளர்களாக பலர் இணைந்துகொண்டமையும், எதிர்காலச் செயற்பாடுகளில் இணைந்துகொள்ளத் தொடர்புகளை நிறுவிக்கொண்டமையும் ஆக்கபூர்வமாக அமைந்து. அத்தோடு கடந்த 07.01.2017 Dortmund நகரில் நடைபெற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த உறவுகளின் ஒன்றுகூடலுக்கும் SOFT இளையோர் அமைப்புக்கு அழைப்பு விடப்பட்டிருந்ததன் நிமித்தம் எமது செயற்பாட்டாளர்கள் அந்த ஒன்றுகூடலில் இணைந்து SOFT அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தனர். அதன்பின்னர் அங்கே பதினாறுக்கும் மேற்பட்ட இளையோர்கள் SOFT அமைப்புடன் இணைந்துகொண்டமையானது மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் எமக்குத் தந்தது. தாயகம் நோக்கிய எமது செயற்பாடுகளில் தம்மாலான பங்கினை ஆற்றத் தாம் தயாராக இருப்பதாக வல்வெட்டித்துறை உறவுகள் உறுதியளித்தனர். இதேபோலவே, மேலும் பல தமிழுறவுகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும்பொழுதில் எமது தாயகம் நோக்கிய செயற்பாடுகளை நாம் விரைவுபடுத்த முடியும்.

நன்றி….

பேச்சாளர்
SOFT இளையோர் அமைப்பு

Top