வெலிக்கடை சிறையிலிருந்து ஆயுள் கைதியொருவர் தப்பியோட்டம்

பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வெளிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஈ.சமன் என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் நேற்றைய தினம் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தப்பிச் செல்லும் போது 11 சிறைக்காவலர்கள் இருந்துள்ளதாகவும் ஆனால் அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்திருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Top