பிரிட்டனின் முன்னாள் உளவாளியே டிரம்பை அம்பலப்படுத்தினார்.

ரஸ்யாவிடம் டிரம்ப குறித்த இரகசிய வீடியோக்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் உள்ளன என்ற விபரத்தை சிஜஏ யிற்காக சேகரித்தவர் பிரிட்டனின் முன்னாள் உளவாளி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டனின் முன்னாள் உளவாளியும் அமெரிக்கவின் சிஜஏயிற்காக நீண்ட நாட்களாக பணியாற்றி வருபவருமான கிறிஸ்டொபர் ஸ்டீல் என்பவரே டிரம்ப் குறித்து ரஸ்யாவிடம் இரகசிய தகவல்கள் உள்ளதை கண்டுபிடித்தவர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன
டிரம்ப் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக அவரது எதிராளிகளே முதலில ஸ்டீலை பயன்படுத்தியதாகவும்,எனினும் பின்னர் அவர் கடந்த வருடம் அமெரிக்காவுடன் தனது புலனாய்வு தகவல்களை பரிமாறதொடங்கியதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை டிரம்ப் முற்றாக நிராகரித்துள்ளார்,இது போலியான செய்தி இப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை, எனது எதிராளிகளின் சதியிது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Top