யேர்மனியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட இளம்பெண்ணுக்கு 6 வருட சிறை தண்டனை!

ஜெர்மனியில் போலீசார் ஒருவரைக் கத்தியால் குத்தியது தொடர்பான வழக்கில் இளம் பெண் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

ஜெர்மனி மற்றும் மொராக்கோ பெற்றோர்களுக்குப் பிறந்த சஃபியா என்ற அந்தப் பெண் இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார்.

16 வயது நிரம்பிய இந்த பெண் ஏற்கனவே துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகருக்குச் சென்று தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்குப் பின்னர் அவரது பெற்றோர்கள் அவரைக் கண்டுபிடித்து ஜெர்மனிக்கு அழைத்துவந்துள்ளனர்.

இந்நிலையில் ஹனோவர் ரயில் நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை அந்தப் பெண் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

Top