12.500 போராளிகளை உடனே கைதுசெய்ய வேண்டுமாம்!

இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்களை விசாரிக்கவேண்டுமென தமிழர் தரப்பு தொடர்ச்சியாக அறிவுறுத்துவதுபோன்று, விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையை நடாத்துவதற்கு 12,500 விடுதலைப்புலிகளையும் உடனடியாகக் கைதுசெய்யவேண்டுமென மேல்மாகாண அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டைக் கோருவதானது தமிழீழத்தை மறைமுகமாகக் கோருவதற்குச் சமனானது எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதிபதிகளை அழைத்து போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள்தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்கா இராணுவத்தினர் யுத்த விதிமுறைகளை மீறி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் அதனை விசாரணைசெய்யவேண்டும். அதேபோல் விடுதலைப்புலிகள் தொடர்பான விசாரணைக்கு அனைத்து முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையோ, உள்ளக விசாரணையோ மேற்கொண்டாலும் இரண்டு தரப்பினரையும் விசாரணை செய்யவேண்டும்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் முன்னர் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களே, அவர்களையும் விசாரணை நடாத்தவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Top