நாடு திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2013ஆம் ஆண்டு இவர், மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார்.

கைது செய்யப்பட்டவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Top