ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை அடையாள அணிவகுப்பு உத்தரவு

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு இட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22ம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்ததுடன் , அதுவரையில் இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை குறித்த வழக்கு நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவ்வாறு உத்தரவு இட்டார்.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ம் திகதி கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பில் பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அதேவளை குறித்த படுகொலை சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியமாக 12வயது சிறுவன் ஒருவன் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Top