சுமந்திரனை துரோகியாகக் காட்ட முயற்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சாடினார் சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தி, அதில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டுமென தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டுவந்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுமந்திரனை துரோகியெனச் விமர்சிக்கும் அரசியல் அரசியல் கட்சி உறுப்பினர்களைச் சாடி அவர் உரை நிகழ்த்தினார்.

‘வெறும் 15ஆயிரம் வாக்குகளைப் பெற்ற கட்சியொன்று சுமந்திரனைத் துரோகியாகக் காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் அந்தக் கட்சி பெற்ற வாக்குகளை விட சுமந்திரன் நான்கு மடங்கு விருப்பு வாக்குகளைப் பெற்றவர். அவரை துரோகி என்கின்றனர்.

எமது மக்களுக்கும் நாட்டுக்கும் பெறுமதியான சேவைகளை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவே நாம் சுமந்திரனைப் பார்க்கிறோம்.

அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

Related posts

Top