சுமந்திரன் மன்னிப்பு கோரவேண்டும் – காணாமல் போனோர் பாதுகாவலர்!

காணாமல் போனோர் தொடர்பில் வெளியிட்ட கருத்து தொடர்பில் மக்களிடம் மூன்று நாட்களுக்குள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் வலியறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் கடந்த தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரத போராட்டம் 26 ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுடன் அரசாங்க தரப்பு அமைச்சர்கள் கடந்த ஒன்பதாம் திகதி பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
முன்னதாக போராட்டகாரருடன் வவுனியாவில் நேரில் கலந்துரையாடி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவரத்தன வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின்போது அரசாங்க தரப்பு அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தமிழத்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலாநாதன் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
எவ்வாறாயினும் அதற்கு எதிரப்பு வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
காணாமல்போனோர் தொடர்பிலான பிரச்சினை ஆயிரக்கணக்கில் இருக்கும் நிலையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள் தனியே அவர்களின் பிரச்சினைகளையே முன்னிலைப்படுத்தியதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன் விஜேயவர்த்தனவை முன்னிறுத்தி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Top