ஈராக்கில் தோல்வி அடைந்துவிட்டோம்: ஐ.எஸ் பயங்கரவாத இயக்க தலைவர் அல்பாக்தாதி

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை ஒடுக்க கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்க கூட்டு படைகள் அங்கு முகாமிட்டு வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா ராணுவத்தின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் மீண்டும் அண்மையில் ஈராக் ராணுவ வசமானதுஇது அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்- பாக்தாதி பிரியாவிடை உரை நிகழ்த்தியதாக அங்குள்ள சேனல்களில் செய்தி வெளியாகின. தனது உரையில், ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அரபு நாடுகளை சாராத பயங்கரவாதிகள் தங்கள் நாடுகளுக்கு தப்பி சென்று விட வேண்டும் அல்லது அவர்கள் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்று கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஈராக்கில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் சிரியாவிற்கு தப்பிச்சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

Top