13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட வந்த 13 இந்திய மீனவர்களை நேற்று இரவு சிறீலங்காக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் ஜகதாப்பட்டினம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 10, 11 மணியளவிலும் வெற்றிலைக்கேணி, சுண்டிக்குள கடற்பரப்பில் 9 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 04 மீனவர்களும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளன.

குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.குறித்த 13 இந்திய மீனவர்களை இன்றைய தினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Top