ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஜ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான விரிவான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Tags

Related posts

Top