அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் எவ் புஜ்வால்ட் மற்றும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே ஆகியோருடனேயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் விவகாரங்கள் குறித்து அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக மங்கள சமரவீர தகவல் வௌியிட்டுள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான அடுத்த கட்டநகர்வுகள் மற்றும், அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Top