வைத்தியர்களின் பணி நிறுத்தத்தினால் கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளில் பணி முடக்கம்!

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு வடக்கு மாகாண வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு இன்று வடக்கு மாகாண வைத்தியர்கள் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக குறித்த வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன இயங்கவில்லையெனவும், அவசர சிகிச்சைகளும் மந்த கதியிலேயே இடம்பெற்றது எனவும் தெரியவந்துள்ளது.

Top