கனடிய உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்காவில் – சம்பந்தனையும் சந்திப்பு

கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அரசியல், வர்த்தக மற்றும் அபிவிருத்தி சார்ந்த விவகாரங்களைக் கையாளும் கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்கள அதிகாரிகள், சிறிலங்கா பயணத்தின் போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் புலமையாளர்களையும் இந்தக் குழுவினர் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்புகளில் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான கனடியத் தூதுவரும் இந்தச் சந்திப்புகளில் பங்கேற்றார்.

Related posts

Top