தினகரனின் பதிலை ஏற்கமுடியாது சசிகலாவே பதில் கூறவேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ”அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது.

தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அதிகாரபூர்வ பதவியிலும் இல்லை. கட்சியில் அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர் மட்டுமே பதிலளிக்க முடியும்.

நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

Top