தமிழீழ விடுதலைக்கான எழுச்சிக்கூட்டம் – சென்னை

தமிழகம், தமிழீழம் இரண்டும் போராட்ட களத்தில் நிற்கிறது.

தமிழீழ மக்களின் போராட்ட பயணத்திற்கு துணை நிற்கும் வகையிலும், அவர்களது கோரிக்கையை வலுப்படுத்தவும் எழுச்சி பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்துகிறோம்.

சென்ற பிப்ரவரி 12ம் தேதி திட்டமிட்டிருந்த ‘தமிழீழ விடுதலை மாநாடு’ தமிழக அரசினால் கொண்டுவரப்பட்ட 144 தடைச் சட்டத்தினாலும், சல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பான மக்கள் மீதான ஒடுக்குமுறையாலும், பாதிக்…கப்பட்ட மக்களுக்காக துணை நிற்கும் செயல்பாடுகளாலும் நடத்த இயலாது போயிற்று. இந்த மாநாட்டில் பேச இருந்த கோரிக்கைகள், விளக்கங்களை விரிவாக பேச பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சமகால நிகழ்வினையும், பிற நாடுகளின் தலையீடுகள் குறித்தும் பேசுவோம், வாருங்கள்.

விரிவான தலைப்புகளில் மே17 இயக்கத் தோழர்கள் பேசுகிறார்கள்.. விடுதலைப் போராட்டத்தின் வீரியம் குறித்து சக தோழமை இயக்கத் தோழர்கள் பேசுகிறார்கள்.

போராடும் தமிழர்களுக்காக துணை நிற்போம்.

இடம்: சென்னை, தி.நகர், (பேருந்து நிலையம் பின்) முத்துரங்கன் சாலை.

தேதி: 04-மார்ச்- 2017 , சனிக்கிழமை, மாலை 4 மணி முதல்.

அவசியம் வாருங்கள்…

Top