அகதிகள், இனவாதம் உள்ளிட்ட சிக்கல்: ஆஸ்திரேலியாவின் மனநிலையைச் சொல்லும் புதிய ஆய்வு

கடந்த ஒரு வருடத்தில் ஐந்தில் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் இனவாத பாகுபாட்டினால் பாதிக்கப்படுவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இனவாத பாகுபாடுகள் தொடர்பான இந்த ஆய்வினை எஸ்பிஎஸ் ஊடகமும் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தியுள்ளது. இந்த ஆய்வு சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இஸ்லாமியர்கள் மீதும் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழக்கூடியவர்கள் மீதும் பாகுபாடான பார்வைகள் நிலுவுவதாக தெரிய வந்துள்ளது.
* முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியர்கள் மீது 31.6% பேர் எதிர்மறையான உணர்வுகளை கொண்டுள்ளனர், 22.4% பேர் அரபிய ஆஸ்திரேலியர்கள் மீதும் 9% பேர் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மீது எதிர்மறையான உணர்வுகளை கொண்டிருக்கின்றனர்.
* 36.4% பேர் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் அல்லது மிக அதிகம் என நம்புகின்றனர்.
* பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களின் பழைமையான நம்பிக்கைகளால் ஆஸ்திரேலியா வலுவிழப்பதாக 41.1% எண்ணுகின்றனர்.
*ஆப்பிரிக்க அகதிகளில் ஆஸ்திரேலியாவில் குற்றம் அதிகரிக்கிறது என 20.5% நம்புகின்றனர். அந்த கருத்தாக்கத்தை பெரும்பாலும் ஆண்களும் வயது முதிர்ந்தவர்களுமே அதிகமாக கொண்டிருக்கின்றனர்.
*32% பேர் தன்னுடைய பணியிடத்தில் இனவாதத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே போல் 32% கல்வி நிலையங்களில் எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அதில் ஆங்கிலம் தெரியாதவர்களே பெருமளவு இந்த இனவாத தாக்குதல்களுக்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது.
* அதே சமயம், 54% பேர் சொந்த நாட்டில் ஆபத்துள்ள அகதிகளுக்கு ஆஸ்திரேலியா உதவ வேண்டும் என்கின்றனர். 43% பேர் படகில் வரும் அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என பதிவு செய்துள்ளனர்.

Video Courtesy: SBS

Related posts

Top