யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்களிடம் மூக்குடைபட்ட சுமந்திரன்!

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களின் போர் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இதில் ஒரு அங்கமாக சொல்லாடல் நிகழ்வும் இன்று கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இன்றுள்ள இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் நிறைவேற்றும் தகைமை உடையவர்களா என்ற தலைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

‘இன்றுள்ள தலைவர்களுள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் தகைமை அற்றவர்கள்’ என்ற தலைப்பில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் விவாதித்தார்கள்.
இச் சொல்லாடல் நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இன்று மாலை .6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுமந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். சுமந்திரன் முன்னிலையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் தமிழ்த் தலைமைகளின் துரோகத்தை அப்பலப்படுத்தி வெற்றியை தமதாக்கிக் கொண்டுள்ளார்கள்.

தாயக அரசியல் தளத்தின் அடாவடி நபராக வலம்வந்து கொண்டிருக்கும் சுமந்திரன் 18 வயதுப் பொடியளிட்ட மூக்குடைபட்டுள்ளார். அவர் 16 விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடனே நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

தமிழர்களால் நடத்தப்பட்டு தமிழர்களே அதுவும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றிருந்த ஒரு நிகழ்வில் தமிழ் அரசியல் தலைவரான சுமந்திரன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பங்கேற்கும் நிலை புலப்படுத்தி நிற்கும் உண்மையே அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருப்பதை இடித்துரைத்துள்ளது.

ஈழதேசம் இணையம்.

Related posts

Top