சிறீலங்கா அரசாங்கமும் க்ளோபல் தமிழ் போரமும் இணைந்து செயற்படத் திட்டம் – கொள்கை மறந்த இமெனுவல்

சிறீலங்கா அரசாங்கமும் க்ளோபல் தமிழ் போரம் அமைப்பும் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் க்ளோபல் தமிழ் பேராம் அமைப்பும் இலங்கை அரசாங்கமும் இணைந்து செயற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

க்ளோபல் தமிழ் போரம் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் ஜெனீவாவில சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட உள்ளதாக தெரிவித்த க்ளோபல் தமிழ் போரம் அமைப்பின் தலைவர் இமெனுவல் ஆண்டகை குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் உள்ளிட்ட விடயங்களில் திருப்தியடைய முடியாது எனவும் எனினும் நம்பிக்கையை இழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

க்ளோபல் தமிழ் போரம் என்ற ஒரு அமைப்பு இயங்குகிறதா? அதில் யார் யார் உறுப்பினர்களாக உள்ளனர்? இவர்களின் கடந்த கால செயற்பாடுகள் என்ன? அதை விட ஈழத்தமிழ் மக்களின் ஆதரவு இவர்களுக்கு உள்ளதா என்ற கேள்விகளுக்கு கொள்கை மறந்த இமெனுவல் ஆண்டகை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டும்.

Related posts

Top