மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்லடி நாவலடி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. பி . வெதகெதர தெரிவித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Top